இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய அணியின் பரம எதிரியான பாகிஸ்தானின் ரசிகர்கள் இப்படி நினைப்பது சற்று விசித்திரமான ஒன்று.
கடைசியாக தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணி களுக்கு எதிரான ஆட்டங்களில் மறுமலர்ச்சி கண்டுவரும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் (நேற்றைய ஆட்டம்) மற்றும் பங்ளாதேஷ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் ஓட்ட விகித அடிப்படையில் அரை யிறுதிக்குள் நுழைய பாகிஸ்தானுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பட்டி யலில் முதல் மூன்று இடங்களை எளிதில் பிடித்துவிடும் எனத் தெரிகிறது. நான்காவது இடத்துக் காக இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் போட்டி யிடுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி அடுத்து எதிர்கொள்ளும் இங்கி லாந்து, இலங்கை மற்றும் பங்ளா தேஷ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையும். மாறாக, இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் தோற்றால் அது பாகிஸ்தானுக்குப் பாதகமாக முடியும். இதனால் இன்று இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹூசைன் தனது டுவிட்டரில், இந்தியா=இங்கிலாந்து ஆட்டத் தில், "உங்கள் ஆதரவு யாருக்கு?" என்று பாகிஸ்தான் ரசிகர்களைக் கேட்டிருந்தார். இந்திய அணிக்கே தங்கள் ஆதரவு என பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதை விரும்பாத இந்திய அணி, பங்ளாதேஷ், இலங்கை உடனான எதிர்வரும் ஆட்டங்களில் வேண்டுமென்றே தோற்கக்கூடும் என்று முன்னாள் பாகிஸ்தானிய வீரர் பாசித் அலி கூறியுள்ளார்.

