அடி வாங்கிய நியூசிலாந்து

அடி வாங்கிய நியூசிலாந்து

2 mins read

லார்ட்ஸ்: உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா அணித் தலை வர் பந்தடிப்பை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது அந்த அணி.

பின்னர் 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில் மற்றும் ஹென்றி நிக்கலஸ் ஆகியோர் முதலா வதாக களமிறங்கினர்.

அதில் ஹென்றி நிக்கலஸ் 8(20) ஓட்டங்களும் மார்டின் குப்தில் 20(43) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 40(51) ஓட்டங்களும் அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30(54) ஓட்டங்களும் கிராண்ட் ஹோம் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய டாம் லாதம் 14(28) ஓட்டங்களும் ஜேம்ஸ் நீசம் 9(22) ஓட்டங்களும் சோதி 5(4) ஓட்டங்களும் பர்குசன் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும், சாண்ட்னர் 12(29) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளி யேறினர். இறுதியில் டிரன்ட் போல்ட் 2(7) ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முடிவில் நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும் ஜேசன் பெஹண்ட்ரோப் 2 விக்கெட்டுகளும் லயான், கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகி யோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.