15 ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக்கின் முதல் ஆட்டம்

15 ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக்கின் முதல் ஆட்டம்

1 mins read
c9270d58-016d-4eb9-9deb-2a9b34ff3bd0
-

லண்டன்: பதினைந்து ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் (படம்) நேற்றுதான் தொடங்கினார்.

உலகக் கிண்ண இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் இடம்பெற்றார். ஆனால், ஒரு போட்டியில்கூட அவர் களமிறக்கப்படவில்லை. அதற்கடுத்து 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை.

இதற்கிடையே, இப்போது நடக்கும் போட்டியில் விளையாடுகிறார். ஆனால், இதுவரை நடந்த போட்டிகளில் ஒன்றில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த 40 வது லீக் போட்டியில், இந்தியா = பங்ளாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கேதர் ஜாதவுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், நேற்றுதான் அவர் உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தை ஆடினார்.

அதே நேரம், நேற்றைய போட்டியில் தோனி, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட்காப்பாளர்கள் விளை யாடினர். ஒரு போட்டியில் மூன்று விக்கெட் காப்பாளர்கள் பங்கேற்று விளையாடுவது அரிது.