ஹோம் யுனைடெட் பயிற்றுநரானார் ராடி

ஹோம் யுனைடெட் பயிற்றுநரானார் ராடி

2 mins read
10e712bd-3e4d-4e6b-9d9b-c315f6252c02
ஹோம் யுனைடெட்டின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ராடி அவ்ரமோவிச் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ராடி அவ்ர மோவிச், இனி சிங்கப்பூர் பிரிமியர் லீக் குழுவான ஹோம் யுனைடெட் டின் தலைமைப் பயிற்றுவிப்பாள ராகப் பணியாற்றுவார் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

செர்பியாவைச் சேர்ந்த 69 வயது திரு ராடி, ஹோம் யுனை டெட் குழுவின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக இருந்த நோர் ரஹ்மானுக்குப் பதிலாக நிரந்தர பொறுப்பேற்கிறார் என்று நேற்று ஹோம் யுனைடெட் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.

இதற்கு முன் நிரந்தர பயிற்று விப்பாளராகப் பணியாற்றிய சஸ் வாடிமாத்தா டசுக்கி கடந்த ஏப்ரல் மாதம் அந்தப் பணியிலிருந்து விலகினார்.

சிங்கப்பூர் காற்பந்து வரலாற் றில் ராடியே ஆக வெற்றிகர மான பயிற்றுவிப்பாளராகக் கருதப் படுகிறார்.

அவரது பயிற்றுவிப்பின் கீழ் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு ஆசியான் காற்பந்து வெற்றியாளர் விருதை 2004, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டில் சிங்கப் பூரை விட்டு புறப்பட்ட ராடி, 2014, 2015ஆம் ஆண்டுகளில் மியன்மார் கேசிய காற்பந்துக் குழுவில் பயிற் றுவிப்பாளராக இருந்தார்.

கடந்த ஆண்டு ராடி குவைத் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற் றுவிப்பாளராக சிறிது காலம் பணி யாற்றினார். ஒன்பது குழுக்கள் கொண்ட சிங்கப்பூர் பிரிமியர் லீக் போட் டிகளில் 12 ஆட்டங்களை முடித்தி ருக்கும் ஹோம் யுனை டெட் ஆறு ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் 14 புள்ளிகளையே பெற்று, பட்டியலில் ஆறாவது நிலையில் உள்ளது. பட்டியலில் ஹோன் யுனைடெட்டின் நிலையை உயர்த்துவது ராடியின் உடனடி முன்னுரிமைப் பணி.

பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள 'யங் லயன்ஸ்' குழுவை, ஹோம் யுனைடெட் குழு இன்று சந்திக்கிறது.