உலகக்கிண்ண கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா

பர்மிங்ஹம்: எட்ஜ்பாஸ்டன் திடலில் நேற்று முன்தினம் நடந்த உலகக்கிண்ண ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியை 28 ஓட்ட வித்தியாசத்தி வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி.

தோல்வியால் உலகக் கிண்ணத்தொடரில் இருந்து பங்ளாதேஷ் வெளியேறுகிறது. மாறாக, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தாற்போல் 2வது அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்தடிப்பைத் தேர்ந்து எடுத்தது. பங்ளாதேஷ் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் சர்மா 90 பந்துகளில் சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுலுடன் சேர்ந்து அவர் 180 ஓட்டங்களைச் சேர்த்தார்.

ரோகித் 5 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 92 பந்துகளில் 104 ஓட்டங்கள் சேர்த்து சௌம்ய சர்க்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அணித் தலைவர் கோஹ்லி, ராகுலுடன் இணைந்தார். இந்த ஜோடி சிறிது நேரமே நிலைத்தது. ராகுல் 77 ஓட்டங்களில் ரூபெல் ஹுசைன் பந்துவீச்சில் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரிஷப் பன்ட் கோஹ்லி

யுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்துவந்த நிலையில் கோஹ்லி 26 ஓட்டங்களில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியாவும் வந்த வேகத்தில் ஓட்டமெடுக்காமல் வெளியேறினார். ஓரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.

அப்போது டோனி களமிறங்கி, ரிஷப் பன்டுடன் சேர்ந்தார். ரிஷப்பன்ட் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர் விளாச, டோனி அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசி நிதானமாக பந்தடித்தார். டோனி மட்டும் பொறுப்பாக விளையாடாவிட்டால் இந்திய அணி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி 300 ஓட்டங்களை எட்டி இருக்காது. ரிஷப் பன்ட் 41 பந்துகளில் 48 ஓட்டங்கள் (1 சிக்சர், 6

பவுண்டரி) அடித்தநிலையில் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வெளியேறினார். டோனியும் பன்ட்டும் 5வது விக்கெட்டுக்கு 40 ஒட்டங்களைச் சேர்த்தனர்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 8 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் சேர்த்தது.

பங்ளாதேஷ் தரப்பில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

315 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பங்ளாதேஷ் களமிறங்கியது. தமிம் இக்பால், சௌம்ய சர்க்கார் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் இருந்து பங்ளாதேஷ் பந்தடிப்பாளர்கள் திணறியதால், ஓட்ட எண்ணிக்கை மெதுவாகவே உயர்ந்தது.

விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் 58 பந்துகளில் அரைசதம் அடித்து 66 ஓட்டங்களில் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.

7வது விக்கெட்டுக்கு சபீர் ரஹ்மானும் சைஃபுதீனும் ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். இறுதியில் 48 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு பங்ளாதேஷ் ஆட்டமிழந்தது. சைஃபுதீன் 51 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!