உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பூவா தலையாவில் வென்று தற்போது பந்தடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆடிய எட்டு ஆட்டங்களிலும் தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஓர் ஆட்டத்தில் வென்றது. ஆறு ஆட்டங்களில் தோற்றது. அது பங்குபெற்ற ஓர் ஆட்டத்தில் முடிவு உறுதியாகவில்லை. இதற்கான காரணம் அந்த அணியின் ஒருங்கிணைப்பின்மை எனக் கூறப்படுகிறது.