இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெரு

போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்): பிரேசிலில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க நாடுகள் பங்கு­பெறும் கோப்பா அமெரிக்கா காற்­பந்துப் போட்டியின் பரபரப்பான இரண்டாவது அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று பெருவும் நடப்பு வெற்றியாளரான சிலியும் பொரு­தின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு கோல்களை அடித்து முன்னணி வகித்த பெரு, ஆட்டம் முடிவடையவிருக்கும் 91வது நிமி­டத்தில் மற்றொரு கோலைப் புகுத்தி 3-=0 கோல் எண்ணிக்­கையில் சிலியை வீழ்த்தியது.

முதல் கோலை பெருவின் எடிசன் ஃபுளோரஸ் 21வது நிமி­டத்தில் புகுத்த இரண்டாவது கோலை 38வது நிமிடத்தில் யோ‌ஷிமார் யோதுன் போட்டார். மூன்றாவது கோலை பாவ்லோ குயெர்ரோ அடித்தார்.

இப்போட்டியில் 44 ஆண்டு­ களுக்கு பிறகு முதன்முறையாக பெரு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், காற்பந்து விளையாட்டில் உலகின் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும் பரம வைரிகளாகவும் பார்க்கப்படும் பிரேசில், அர்ஜெண்டினா மோதின. அந்த ஆட்டத்தில் பிரேசில் 2=0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்து­விட்டது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பெரு பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து எதிர்­வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற­ விருக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில், பெரு குழுக்கள் மோது­ கின்றன.

நடப்பு போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் 5=0 எனும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலிடம் படுமோசமாக தோல்வியடைந்த பெரு, அதன் பிறகு மறுமலர்ச்சி கண்டது. இறுதி ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த தோல்விக்கு பழிதீர்க்க பெரு முனையும் என எதிர்­பார்க்கலாம்.

லீக் ஆட்டத்தில் பிரே­சிலிடம் பெரு படுதோல்வி அடைந்­ததற்கு காரணமாக திகழ்ந்த அதன் கோல்காப்பாளர், நேற்றைய ஆட்டத்தில் நாயகனாக விளங்­ கினார். சிலியின் கோல் வேட்டை­களை அவர் முறியடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!