மாயவித்தை நிகழ்ந்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

மாயவித்தை நிகழ்ந்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

1 mins read

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பங்ளாதேஷ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது மாயவித்தை நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி­யால் நியூசிலாந்தை முந்தி அரை­யிறுதிக்கு முன்னேற முடியும்.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்­தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகளைப் பெறும். நியூ­சிலாந்து அணி ஏற்கெனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும். இதனால் ஓட்ட விகித அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்குச் செல்லும்.

நியூசிலாந்து அணியின் ஓட்ட விகிதம் (+0.175), பாகிஸ்­தான் அணிக்கு (=0.792) உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு அதிகமாக நியூசிலாந்துக்கே உள்ளது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்ளாதேஷ் அணியை அதிக ஓட்ட வித்தியா­சத்தில் வெற்றி பெற வேண்டும்.