‘கெய்லின் ஓய்வு கிரிக்கெட்டுக்குப் பேரிழப்பு’

லீட்ஸ்: அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் தொடக்கப் பந்தடிப்பாளர் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த உலகமே வருந்தக் கூடும் என்று சக வீரரான ஷே ஹோப் தெரிவித்துள்ளார்.

கெய்ல் நேற்று முன்தினம் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் அவர் ஏழு ஓட்டங்களை மட்டும் எடுத்து ஏமாற்றமளித்தார். ஆயினும், வெஸ்ட் இண்டீஸ் 23 ஓட்ட வித்

தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, உலகக் கிண்

ணப் போட்டிகளுடன் கிரிக்கெட்

டில் இருந்து ஓய்வுபெறுவதாக கெய்ல் அறிவித்திருந்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹோப், “கெய்லிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷ

யங்கள் ஏராளம் உள்ளன. அவர் ஓய்வுபெறும்போது ஒட்டுமொத்த உலகமே சோகத்தில் மூழ்கலாம். அது கிரிக்கெட்டுக்குத் துயர

மான நாள்,” என்றார்.

இதனிடையே, ஓய்வு முடிவை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக கெய்ல் கூறியிருப்ப தற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள போதும் கெய்ல் ஓய்வு முடிவைத் திரும்பப் பெறக்கூடாது,” என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!