இந்திய அணிக்கு இறுதி வாய்ப்பு

லீட்ஸ்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து விட்டபோதும் நடுவரிசை பந்தடிப்பாளர்களின் பங்களிப்பு இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (544 ஓட்டங்கள்) மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள் அடித்து கோஹ்லி 408 ஓட்டங்களைக் குவித்திருப்பினும் அவரது தரத்திற்கு ரசிகர்கள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

நூறு பந்துகளுக்கு 93.3 ஓட்டங்கள் என்ற பந்தடிப்பு விகிதத்தில் சராசரியாக 44.6 ஓட்டங்களை எடுத்திருக்கும் டோனி அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தடுமாறி வருகிறார். சுழற்பந்துவீச்சை பொறுத்தமட்டில் இதுவரை 81 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

இவர்களை விடுத்து, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகிய நடுவரிசை ஆட்டக்காரர்கள் ஒரு போட்டியில் கூட குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டம் குவிக்கவில்லை. காயம் அடைந்து வெளியேறிய விஜய் சங்கருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பன்ட் சற்று நம்பிக்கை அளிக்கிறார்.

இந்த நிலையில், இன்று நடக்க உள்ள இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அடுத்தது அரையிறுதிப் போட்டி என்பதால் நடுவரிசை பந்தடிப்பில் காணப்படும் குறைகளைச் சரிசெய்ய இந்திய அணிக்கு இன்றே கடைசி வாய்ப்பு. ஆகையால், இறுதி ஓவர் களில் டோனி மட்டையைச் சுழற்றி ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அதே வேளையில், சுழற்பந்து வீச்சில் அவர் தடுமாறுவதைக் கவனத்தில் கொண்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிலிந்த சிறிவர்தனேவைக் களமிறக்குவது குறித்து இலங்கை அணி யோசித்து வருகிறது. பகுதி நேரப் பந்துவீச்சாளர் என்றபோதும் தனஞ்சய டி சில்வா ஓவருக்கு ஐந்து ஓட்டங்களுக்கும் குறைவா

கவே விட்டுக்கொடுத்து வருவது இலங்கை அணிக்குச் சாதகமான அம்சம். இதனிடையே, விளையாடும் பதினொருவரில் ஒருவராக இன் றேனும் அணியில் இடம்பெற மாட் டோமா என்று ரவீந்திர ஜடேஜா காத்திருக்கிறார். ஆனாலும், இலங்கை அணி இடது கை பந்தடிப்பாளர்கள் பலரைக் கொண்டுள்ளதால் ஜடேஜாவின் ஏக்கம் தீர வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்திய அணி இலங்கையை வீழ்த்தி, இன்று நடக்கும் இன்னோர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவிடம் தோற்கும் பட்சத்தில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!