தமது கணவர் சோயப் மாலிக்கின் சாதனைகளை எண்ணி பெருமைப் படுவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
தமது கணவரின் ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, "ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு உண்டு," என்றார். ஆனால் வாழ்வைப் பொறுத்தவரை ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாயடிதைத் தாங்கள் பெரு மையாக நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். கணவரை ஏகத் துக்கும் புகழ்ந்த சானியா, தங்களது சாதனைகளை எண்ணி தாமும் மகன் இஷானும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

