ஹைதராபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசையில் இடம் பெற்று இருப்பவர் ஜடேஜா. உலகக் கிண்ண அணியில் இவருக்கு இதுவரை 11 பேர் கொண்ட ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைவரான அசாருதீன் இது தொடர்பாக கூறியதாவது, "ஜடேஜா சிறந்த ஆல்ரவுண்டர். நடுவரிசையில் சிறப்பாக விளையாடக்கூடியவர். நல்ல சுழற் பந்து வீச்சாளர். அவரை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள முயல வேண்டும். அரையிறுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
"பங்ளாதேஷுக்கு எதிரான ஆட்டத்திலேயே அவரை ஆடவைத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்துக்கு அவர் மிகுந்த பயன் உள்ளதாக இருப்பார். அரையிறுதி ஆட்டம் முக்கியமானது. வீரர்களின் தேர்வு கவனமுடன் இருக்க வேண்டும்," என்றார் அவர்.
அதே கருத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் எதிரொலித்தார்.
"இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதாக தெரியவில்லை. அரை இறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு தர வேண்டும். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சகலை நீக்கிவிட்டு அவரைக் சேர்க்கவேண்டும்," என்றார் டீன் ஜோன்ஸ்.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா விளையாடும் வாய்ப்பைப் இடம்பெற்றார்.

