இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றப்படும் அந்த அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி நேற்று தமது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்களும் வீதிகளில் விழா நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே டோனியைப் புகழும் வாசகங்கள் வலம் வந்தன.
சுமார் 15 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டோனி கடந்த 2004 டிசம்பர் மாதம் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறி
முகம் ஆனார். சென்னை ஐபிஎல் அணியின் தலைவராக வெற்றி நடைபோடும் டோனிக்கு தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் சமூக ஊடகங்களில் 'தல தல' என்று புகழ்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். டோனி தமது மகள் ஜிவாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காணொளியை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ளார்.

