ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியோடு வெளியேறியது தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியோடு வெளியேறியது தென்னாப்பிரிக்கா

2 mins read
3a47d4a1-6211-4781-aafc-da1f9d2889bd
தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா (இடது) வீசிய கடைசி பகுதி ஓவரில், விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததில், உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது தோல்வியைச் சந்தித்தது. படம்: இணையம் -

மான்செஸ்டர்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக் கிண்ணப் போட்டி யின் கடைசி லீக் ஆட்டம் ரசிகர் களுக்கு விருந்தளிக்கும் வித மாக அமைந்தது.

தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா வின் கடைசிநேர பந்துவீச்சு ஆட் டத்தை விறுவிறுப்பாக்கியதோடு, ஆஸ்திரேலியாவை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொள்ள வும் செய்தது.

உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறுவது உறுதி யாகிவிட்ட நிலையிலும் ஆஸ்திரே லியாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற வேட்கையோடு விளை யாடியது தென்னாப்பிரிக்கா.

கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின், முதல் முறையாக ஆஸ்தி ரேலிய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியோடு வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

முதலில் பந்தடித்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங் கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ஓட் டங்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்தது.

குறிப்பாக கடைசி 10 ஓவரில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது ஆஸ்திரேலியா.

தென்னாப்பிரிக்க அணியில் சதமடித்த டு பிளசிஸ், ஆட்ட நாயகன் விருது பெற்றார். ரபாடா வீசிய 48வது ஓவரில் ஸ்டார்க், கவாஜா என இரண்டு விக்கெட்டு கள் வீழ்ந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தத் தோல்வி மூலம் புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலிய அணி 2வது இடத் தையும் இந்தியா முதலிடத்தையும் பிடித்தது.

இதனால் வரும் வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் ஆஸ்தி ரேலிய அணி மோதவுள்ளது.

லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைச் சிதைத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அரை இறுதியில் 2வது முறையாகச் அந்நாட்டை சந்திக்கிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக் காவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த, ஆஸ்திரேலிய வீரர் கள் ஸ்டானிஸ், உஸ்மான் கவாஜா தொடரில் இருந்து விலகக்கூடும் என்ற நிலை உள்ளது.

லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் முனைப் பில் இங்கிலாந்து விளையாடக் கூடிய நிலையில், இது ஆஸ்தி ரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.