மான்செஸ்டர்: இந்தியா, நியூசி லாந்து கிரிக்கெட் அணிகள் மோதவிருந்த உலகக் கிண்ண லீக் ஆட்டம் மழையால் கைவிடப் பட்ட நிலையில், இந்த அணிகள் நாளை அரையிறுதியில் மோதுகின் றன.
சிங்கப்பூர் நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிக்கான வானிலை அறிக்கைப்படி லேசான மழைத் தூறலுக்கு வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, 19 வயதிற்குட் பட்டோருக்கான 2008 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி யில் இந்தியாவின் கோஹ்லி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தலைமையிலான அணிகள் மோதின என்றும் அதில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் நினைவுகூரத்தக்கது.
நாளைய ஆட்டமும் அவ்வித மாகவே அமைய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

