சதமடிக்க சளைக்காத ரோகித் சர்மா

சதமடிக்க சளைக்காத ரோகித் சர்மா

2 mins read
a800bc3f-f0af-4316-9fa5-8776ec3dc6c3
ரோகித் சர்மா (வலது), லோகேஷ் ராகுல் இணை முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் சேர்த்தது. படம்: இணையம் -

ஹெடிங்லே: ஒரே உலகக் கிண் ணப் போட்டித் தொடரில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந் திய வீரர் ரோகித் சர்மா.

இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 102 ஓட்டங் களைக் கடந்த போது இந்த அரிய உலகச் சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார். ஏற்கெனவே தென்னாப்பிரிக் காவுக்கு எதிராக 122 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு எதிராக 140 ஓட்டங்களும் இங்கிலாந்துக்கு எதிராக 102 ஓட்டங்களும் பங்ளாதே‌ஷுக்கு எதிராக 104 ஓட்டங்களும் எடுத்து இருந்தார்.

இச்சாதனையின் மூலம் 2015ஆம் ஆண்டு உலகக் கிண் ணத் தொடரில் 4 சதங்கள் விளாசிய இலங்கை வீரர் சங்க காராவின் சாதனையை ரோகித் சர்மா உடைத்தார்.

மேலும், உலகக் கிண்ண கிரிக் கெட் வரலாற்றில் மொத்தம் 6 சதங்கள் அடித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனை யையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவர் ஒரு சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை ரோகித் விரைவில் முறியடிப்பார் என்று ரசி கர்கள் நம்பிக்கை கொண்டுள்ள னர்.

2003ல் டெண்டுல்கர் 673 ஓட் டங்கள் எடுத்ததே உலகக் கிண்ண வரலாற்றில் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களாகும். இச் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 27 ஓட்டங் கள் மட்டுமே தேவைப்படும்.

நடப்புத் தொடரில் ரோகித் சர்மா 647 ஓட்டங்கள் தற்போது வரை சேர்த்து ஓட்டக் குவிப்பில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

இலங்கை வீரர் ரஜிதா வீசிய 29வது ஓவரில் இச்சாதனையை எட்டிய ரோகித், அதே ஓவரில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரோகித்தைத் தவிர, இந்திய வீரர் லோகேஷ் ராகுலும் இலங்கை வீரர் மேத்யூசும் இப்போட்டியில் சதமடித்தனர்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட் டங்கள் சேர்த்தது.

265 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட் டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்தாடிய பும்ரா

முதலில் பந்தடித்த இலங்கை அணியை பந்தாடினார் இந்திய வீரர் பும்ரா.

கருணரத்னே, ஃபெரேரா, மேத் யூஸ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதில், இலங்கையின் பந்தடிப்பு வரிசை சீர்குலைந்தது.

இதில் கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்றச் சாதனையை பும்ரா எட்டினார்.

பந்தடிப்பு என்று பார்க்கும்போது, ரோகித் சர்மா, ராகுல் இணை முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் சேர்த்து அமைத்த வலுவான தொடக்கம் இந்தியாவின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தது.