போலந்தில் நடைபெற்ற குட்னோ திடல்தடப்போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாவது முறையாகத் தங்க விருதை வென்றுள்ளார். ஒரே வாரத்தில் அவர் இப்போது இரண்டு முறை தங்க விருதைப் பெற்றிருக்கிறார்
கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்ட ஹிமா, 200 மீட்டர் ஓட்டத்தை 23.97 வினாடிகளில் முடித்துக்கொண்டு வாகை சூடினார்.
தேசிய விளையாட்டுச் சாதனையாளர் முகம்மது அனாஸ் ஆண்கள் சுற்றில் 200 மீட்டர் ஓட்டத்தை 21.18 வினாடிகளில் முடித்துக்கொண்டு தங்கத்தை வென்றார்.

