கிரிக்கெட் வீரர் டோனி; சில தகவல்கள்

கிரிக்கெட் வீரர் டோனி; சில தகவல்கள்

2 mins read
529d872c-8670-454e-b636-5ff2b574ce67
மகேந்திர சிங் டோனி. (படம்: ஏஎஃப்பி) -

இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மகேந்திர சிங் டோனிக்கு 37 வயதாகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 23 வயதில் தேசிய அளவில் தமது திறன்களை நிரூபித்து சிறந்த விக்கெட் காப்பாளராகவும் பந்தடிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். பின்னர் அவர் அணித்தலைவராகப் பொறுப்பேற்றார். அவரைப் பற்றிய சில தகவல்கள்:

1. 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியன்று டோனி , ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரஞ்சி மாவட்டத்தில் பிறந்தார்.

2. முழுநேர விளையாட்டாளர் ஆவதற்கு முன்னர் டோனி காற்பந்திலும் பூப்பந்திலும் சிறந்து விளங்கினார்.

3. சிறந்த கோல் காப்பாளராக இருந்த டோனியைக் கண்ட அவரது இளம்பருவ பயிற்றுவிப்பாளர் கேஷவ் பானர்ஜி, அவரை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார்.

4. டோனி ஒரு மோட்டார்சைக்கிள் பிரியர். யமாஹா ஆர்டி350, ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், டக்கட்டி 1098, கவாசாக்கி எச் 2, கன்ஃபெடரெட் ஹெலிகேட் எஸ்132 உள்ளிட்ட சொகுசு மோட்டார்சைக்கிள்களை வைத்திருக்கிறார்.

5. டோனி இதுவரை 131 முதல் தர ஆட்டங்களை விளையாடியுள்ளார். 900 சதங்களுடனும் 47 அரை சதங்களுடனும் அவர் 7038 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார்

View post on Instagram
 

[ குடும்பத்தாருடன் டோனி. படம்: சாஷி டோனியின் இன்ஸ்டகிராம்)

6. அனைத்து ஐசிசி கோப்பைகளை அள்ளிச்சென்ற ஒரே அணித்தலைவர் டோனியே.

7. தமது நாட்டின் ராணுவத்தைப் பெரிதும் நேசித்த டோனிக்கு இந்திய அரசு கௌரவ 'லெஃப்டினன்ட் கர்னல்' பட்டத்தை வழங்கியது.

8. எட்டு ஐபிஎல் இறுதிச் சுற்றுகளில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் இவரே.

9. பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹமின் ரசிகராக உள்ளார் டோனி.

10. அணித்தலைவராக 331 அனைத்துலக ஆட்டங்களை ஆடியுள்ளார் டோனி.

குறிப்புச் சொற்கள்