அரையிறுதியில் மோதும் இந்தியா, நியூசிலாந்து

அரையிறுதியில் மோதும் இந்தியா, நியூசிலாந்து

1 mins read
03b61c65-4b85-49eb-9309-b7c8a71468fe
-

கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

உலகக் கிண்ணப் பட்டியலில் இந்தியா 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் ஏழு முறை சந்தித்துள்ளன. நியூசிலாந்து நான்கு முறை (1975, 1979, 1992, 1999) வென்றது. இந்தியா மூன்று முறை (1987ல் இருமுறை, 2003) வென்றது.

இதற்கு முன்னர் ஆறு முறை உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றுகளுக்குள் நுழைந்த இந்தியா, அவற்றில் மூன்றை வென்றது. ஏழு அரையிறுதிச் சுற்றுகளுக்குச் சென்றுள்ள நியூசிலாந்து ஒன்றில் மட்டும் 2015ஆம் ஆண்டில் வென்றது.

மான்செஸ்டர் நகரின் 'ஓல்ட் டிரெஃபர்ட்' அரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நிகழவிருக்கும் இந்த அரையிறுதி எம்.எஸ் டோனியின் 350ஆம் ஓஐடி ஆட்டமாக உள்ளது.