துணிச்சலுடன் போராடிய துனீசியாவிற்கு அரிய வெற்றி

இஸ்மாயிலியா: ஆப்பிரிக்க காற்­பந்துக் குழுக்கள் பங்குபெறும் ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கானா குழுவை பெனால்டியின் மூலம் 5=4 எனும் கோல் கணக்கில் துனீசியா வீழ்த்­தியது.

குறிப்பிடும்படியாக, இந்தப் போட்டியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிக்கம் நிறைந்த கானாவை முதன்முறையாக துனீ­சியா தோற்கடித்துள்ளது.

கூடுதல் நேரம் வரை சென்ற இந்த ஆட்டம் 1-=1 எனும் கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்ட­தால் பெனால்டியின் மூலம் வெற்றி­ யாளர் தீர்மானிக்கப்பட்டது.

இப்போட்டியில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு கானாவிடம் ஆறு முறை தோல்வியைத் தழுவிய துனீசியாவிற்கு இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்று.

ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறு முறை முதல் நான்கு இடங்­களில் ஒன்றைப் பிடித்த கானா­ விற்கு இம்முறை கிடைத்த தோல்வி பின்னடைவைத் தந்து உள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நாளை மறுதினம் அதிகாலை நடக்கும் காலிறுதிச் சுற்றில் இப்போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ள மடகாஸ்கர் குழுவுடன் துனீசியா பொருத உள்ளது. 

எகிப்து ஏற்று நடத்தும் இப்போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் மாலி குழுவை 1=0 எனும் கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட் அதிர்ஷ்டவசமாக வென்­­ றது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்காக விளையாடிவரும் வில்ஃபிரட் ஸாஹா, ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் கோலைப் புகுத்தினார். அதுவே ஐவரி கோஸ்ட்டிற்கு வெற்றி கோலாக அமைந்தது.

இந்த ஆட்டத்தின் பெரும்­பகுதியில் மாலி குழுவே ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் பல கோல் வாய்ப்புகளை அதன் ஆட்டக்கா­ரர்கள் நழுவவிட்டனர். 

ஆட்டத்தின் பிற்பாதியில் மாலி ஆட்டக்காரர்கள் சோர்வடைந் ததைத் தனக்கு சாத­கமாகப் பயன்படுத்திக்கொண்ட ஐவரி கோஸ்ட் வெற்றியை உறுதிசெய் தது.

காலிறுதிச் சுற்றில் அல்ஜீரி­­ யா­வை அது சந்திக்கிறது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்