ஆஸ்திரேலிய வீரர்: இங்கிலாந்துக்கு நெருக்கடி

ஆஸ்திரேலிய வீரர்: இங்கிலாந்துக்கு நெருக்கடி

1 mins read

எட்ஜ்பாஸ்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்குத்தான் நெருக்கடி என்று ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் தெரிவித்து உள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் போட்டியை ஏற்று நடத்தும் இங்கி­லாந்தும் பலப்பரிட்சை நடத்து­ கின்றன.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துதான் வெற்றி பெறும் என்று பரவலாகக் கூறப்படும் கருத்துக்கு லயன் பதில் கூறினார்.

"இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஈராண்டுகளாக இங்கிலாந்து 'நம்பர் 1' அணியாக உள்ளது.

"அதை வைத்துப் பார்த்தால் எங்கள் மீது எந்தவித அழுத்தமும் கிடையாது. இங்கிலாந்து தோல்வி அடைந்தால் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி மீது நெருக்கடி உள்ளது," என்று அவர் கருத்துரைத்தார்.