'போக்பா சிறந்த வீரர்'

'போக்பா சிறந்த வீரர்'

1 mins read
deb20e11-0a77-4b15-b42f-3497920884b9
படம்: ராய்ட்டர்ஸ் -

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து குழுவில் இருந்து பால் போக்பா வெளியேற விரும்புவதாக கூறப்படும் நிலை யில், போக்பா சிறந்த வீரர் என்றும் அவரால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார் அதன் நிர்வாகி ஸ்லோஸ்ஜர்.

கடந்த மாதம் தான் வேறு குழுவிற்கு மாற விரும்புவதை போக்பா சூசகமாக கூறினார்.

"ஜெசி லிங்கார்டுக்கும் பால் போக்பாவுக்கும் இடையில் பிரச்சினை என்று கூறப்படுகிறது.

"ஆனால், போக்பா ஒருநாள் கூட குழுவில் இருந்து தன்னை வேறுபடுத்திப் பார்த்ததில்லை.

"ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர் தனது அபாரமான ஆட் டத்தை வெளிப்படுத்தினார்," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சொன்னார் சோல்சியார்.

கடந்த பருவத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக ஆக அதிக கோல் போட்டவர் பால் போக்பா.