மான்செஸ்டர்: உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் டோனி.
நேற்று முன்தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நியூசிலாந்து, இந்திய அணிகள் மோதின.
இந்த உலகக் கிண்ண கிரிக் கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
முதலில் பந்தடித்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த் திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இது டோனிக்கு 350வது ஒருநாள் போட்டியாகும்.
இதன் மூலம் விக்கெட் காப்பாளராக 350 ஒருநாள் போட்டிகளில் விளை யாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற்றாலும் 44 போட்டிகளில் விக் கெட் காப்பாளராக செயல்பட வில்லை.
இதுமட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் அணித் தலைவராக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்து உள்ளார்.
மேலும் 350 ஒருநாள் போட்டி களில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற் றார்.

