ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து வீரர்

பர்மிங்ஹம்: இங்கிலாந்து கிரிக் கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய முற்றிலும் மாறு பட்ட வீரர்களைக் கொண்டுள்ளது என்று எச்சரித்து உள்ளார் அந்த அணி வீரர் லியம் பிளங்கட்.

உலகக் கிண்ணப் போட்டியின் இன்று நடைபெறவுள்ள இரண்டா வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் எதிரிகளான இங்கிலாந் தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின் றன.

இந்நிலையில் பேசிய இங்கி லாந்து அணியின் °மூத்த வீரர் பிளங்கட், “காலம் மாறிவிட்டது. இங்கிலாந்து அணி தற்போது மிருக வெறியுடன் உள்ளது.

“இங்கிலாந்து அணியின் தற் போதைய வீரர்கள், முந்திய வீரர் களைப் போல் அல்ல. கடும் சவால் மிக்கவர்கள்.

“இதற்கு முன்னர் ஆஸ்திரே லியா இங்கிலாந்தை வென்றிருக்க லாம். ஆனால், இப்போதைய வீரர் களுக்கு எதிராக அவர்கள் விளை யாடியதில்லை.

“முந்திய இங்கிலாந்து அணியைவிட இப்போதைய அணி வலுவானது.

“கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அனைத்துலக தரவரிசையில் முத லிடத்தையும் பிடித்துள்ளோம்.

“எங்களுக்கான நாளில் உல கின் எந்த அணியை வேண்டு மானாலும் நாங்கள் வீழ்த்துவோம்,” என்றார்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர், இங்கிலாந்து அணியின் முன்னேற் றத்தைக் கண்கூடாக பார்த்து வருகிறார்.

“இதற்கு முன்னும் மிகச்சிறந்த வீரர்களை கொண்டிருந்தோம். ஆனால், உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்று நினைத்தது இல்லை.

“ஆனால், தற்போதைய அணியைக் கொண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது,” என்றார் 34 வயது இங்கிலாந்து வீரர் பிளங்கட்.

இங்கிலாந்து அணி ஆஸ்தி ரேலியாவுக்குப் பதிலடி கொடுத்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

பந்தடிப்பு, பந்துவீச்சில் முன்பை விட கூடுதல் பலத்துடன் இங்கி லாந்து திகழ்கிறது. ஜோ ரூட் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதேபோல், பேரிஸ்டோவ், ஜேசன் ராய் இணை இங்கிலாந் திற்கு இன்னொரு பலமாகும்.

ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்சும், பந்து வீச்சில் ஆர்ச்சர், கிறிஸ்வோக்ஸ், மார்க்வுட், பு‌ஷன் கெட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

அதேசமயம், லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஊக்கத் தோடும் நம்பிக்கையோடும் உள்ள ஆஸ்திரேலியாவிற்கு வார்னர், ஆரோன் பிஞ்ச் மிகப்பெரிய பலம்.

உஸ்மான் கவாஜா காயத்தால் விலகியது ஆஸ்திரேலியாவிற்கு பாதிப்பே. அவருக்குப் பதில் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பந்துவீச்சில் வேகப்பந்து வீரர் மிட்சல் ஸ்டார்க் முதுகெலும்பாக இருக்கிறார்.

அவர் 26 விக்கெட் வீழ்த்தி இந்தத் தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

அவரைத் தவிர கம்மின்ஸ், பெகரன்டார்ப் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, “இலக்கை விரட்டுவதைக் கண்டு இங்கி லாந்து அணி பயப்படவில்லை என்று கூறியுள்ளார் அதன் பயிற்று விப்பாளர்.

சொந்த மைதானத்தில் இலக்கை விரட்டுவதில் பிரமாதா மாக செயல்பட்டு வந்த இங்கிலாந்து அணி, நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் சொதப்பியது.

லீக் போட்டிகளின்போது பாகிஸ்தான், இலங்கை, ஆஸ் திரேலியாவுக்கு எதிராக இலக்கை விரட்ட முடியாமல் இங்கிலாந்து தோல்வியைச் சந்தித்தது.

இதில் ஆஸ்திரேலியா எடுத்த 285 ஓட்டங்களை எட்டமுடியாமல் 221 ஓட்டங்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.

எனவே, இன்றைய ஆட்டத்தின் பூவா, தலையா முடிவும் ரசி கர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!