அரையிறுதியில் ஹலெப், செரீனா; வெளியேறினார் கோண்டா

விம்பிள்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலெப், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தகுதி பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை ஜோகன்னா கோண்டா வெளியேறினார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன் ஓர் ஆட்டத்தில் 7ஆம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத சீனா வின் ஷாங் சுவாயை எதிர்கொண் டார்.

இதில் சிமோனா ஹலெப்பிற்கு ஷாங் கடும் நெருக்கடி கொடுத் தார்.

இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறு தியில் ஹலெப் 7 (7) - 6 (4) எனக் கைப்பற்றினார்.

2வது செட்டை சிரமமின்றி 6-1 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 11ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டுத் தர நிலைப் பெறாத அலிசன் ரிஸ்குடன் மோதினார்.

முதல் செட்டை செரீனா வில்லி யம்ஸ் 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 4-6 என இழந்தார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் செரீனா ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 எனக் கைப்பற்றி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

காலிறுதி ஆட்டத்தின் முக் கிய திருப்பமாக இருந்தது கோண்டா, ஸ்டரிகோவாவின் மோதல்.

பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் கோண்டா 7-6 (7-5)- 6-1 எனத் தோற்று விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர் சற்று கோபமாக பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!