கடைசி நேர கோலால் அரையிறுதி வாய்ப்பை வசமாக்கிய நைஜீரியா

கெய்ரோ: தென்னாப்பிரிக்க காற்பந்துக் குழுவை வீழ்த்தி ஆப்பிரிக்க கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது நைஜீரியா.

1-1 என சமநிலையில் இருந்த ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், நைஜீரியா ஒரு கோல் போட்டு வெற்றியைத் தனதாக்கியது.

முன்னதாக, நைஜீரியாவிற் கான முதல் கோலைப் போட்டார் சாமுவேல் சுகிவூஜி. வில்லாரியல் குழுவிற்காக விளையாடி வரும் சுகிவூஜி, தனது தேசிய குழுவிற்காக போட்ட முதல் கோல் இதுதான்.

அலெக்ஸ் இவோபி உதைத்த பந்தை 27வது நிமிடத்தில் கோலாக்கினார் இகோங்.

நைஜீரியாவின் தற்காப்பு அரணைத் தாண்டி கோல் போட முடியாமல் நீண்ட நேரம் திக்குமுக்காடியது தென்னாப்பிரிக்கா.

ஆனால், 71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா கோலாக மாற்றியது.

பந்து வலைக்குள் சென்ற போதும் முதலில் ‘ஆஃப்-சைட்‘ எனக் கூறி கோல் மறுக்கப்பட்டது. ஆயினும், காணொளி உதவி நடுவர் முறையின்கீழ் பின்னர் அது கோலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜுங்குவின் அந்த கோலால் ஆட்டம் 1-1 எனச் சமநிலைக்கு வந்தது. இதையடுத்து, இரு அணிகளும் வெற்றிக்குப் போராடின.

இந்நிலையில், 89வது நிமிடத்தில் நைஜீரியாவின் வில்லியம் டுரோஸ்ட்-இகோங் ஒரு கோல் போட, 2-1 என வெற்றிக் கனியைப் பறித்தது ைநஜீரியா.

முன்னதாக, ஃபிரீ-கிக் வாய்ப்

பின்போது பீட்டர் எட்டிபோ கொடுத்த பந்தை, வில்லியம் கோல் வலைக்குள் செலுத்தத் தவறிவிட்டார்.

மற்றோர் ஆட்டத்தில் பெனின் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வீழ்த்தியது.

ஞாயிற்றுகிழமை நடைபெறும் அரையிறுதியில் ஐவரி கோஸ்ட் அல்லது அல்ஜீரியாவோடு நைஜீரியா மோதும்.

புதன்கிழமை நடைபெறவுள்ள இன்னோர் அரையிறுதியில், மடகாஸ்கர் அல்லது துனீசியாவை செனகல் எதிர்கொள்ளும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!