இறுதியில் மோதும் இங்கிலாந்து, நியூசிலாந்து

இறுதியில் மோதும் இங்கிலாந்து, நியூசிலாந்து

1 mins read
e1d34a10-211e-49e5-8311-91052f93d1df
-

உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை எடுத்து வெற்றி அடைந்தது. நேற்று மாலை தொடங்கிய அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை எடுத்தது.

இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். "எங்கள் குழுவினர் அனைவரும் சிறப்பாக விளையாடினர். அவ்வப்போது சிலர் பதறினாலும் அரையிறுதியில் இது சாதாரணம்," என்று வோக்ஸ் கூறினார்.

இறுதிப் போட்டி இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறும்.