'இங்கிலாந்து நிரூபித்துவிட்டது'

'இங்கிலாந்து நிரூபித்துவிட்டது'

2 mins read
86f8b289-7ddf-48ab-9e61-b56c26572ee5
ஆஸ்திரேலியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறிய மகிழ்ச்சியில் அந்த அணித் தலைவர் ஆய்ன் மோர்கன் (இடது), ஜோ ரூட். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி யின் இடத்தைப் பிடிக்க போட்டி போட வேண்டும் என்பதை அந்த அணி நிரூபித்துவிட்டதாகக் கூறி உள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச்.

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத் தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

"இங்கிலாந்து தனது சிறப்பான ஆட்டத்தால் எங்களை வெளி

யேற்றிவிட்டது.

"ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த சில காலமாக இங்கிலாந்து சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

"அந்த அணியின் இடத்தை எட்டிப்பிடிக்க மற்ற அணிகள் போட்டி போட வேண்டும் என்பதை கடும் நெருக்கடிக்கு இடையிலும் இங்கிலாந்து நிரூபித்துவிட்டது.

"இம்மாதிரியான ஆடுகளத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ஆக்ரோஷமாக இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

"ஆனால் அவர்கள் ஆக்ரோஷ மான பந்தடிப்பை வெளிப்படுத்தி னார்கள். இதில் ஏதாவது ஒன் றுக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

"கடந்த ஓராண்டில் நாங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டு உள்ளோம்.

"இந்த இடத்திற்கு வருவதற்கு கடின உழைப்பைத் தந்த அனை வரையும் நினைத்துப் பெருமை கொள்கிறேன்.

"கிண்ணத்தை வெல்ல வேண் டும் என்ற ஆர்வத்துடன் இந்தத் தொடரை எதிர்கொண்டோம். எனவே இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. இது எங்களின் மோசமான ஆட்டங்களில் ஒன்று," என்றார்.

பிஞ்ச் ஓட்டம் எதுவும் எடுக்கா மல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத் தக்கது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரே லியாவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டியது வோக்ஸ், ஆர்ச்சரின் பந்துவீச்சு.

ஏழு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சரிந்த ஆஸ்திரேலிய அணியால் கடைசி வரை எழ முடியவில்லை.

49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டும் எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 32.1 ஓவர்களில் 226 ஓட்டங்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அந்த அணி இறுதிப் போட் டிக்கு முன்னேறியது இது 4வது முறை.

கடந்த 1975ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்தி ரேலிய அணி பெற்ற இது முதல் தோல்வி இதுதான்.

கிண்ணத்திற்காக நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் நியூ சிலாந்துடன் இங்கிலாந்து மோது கிறது.

1992ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதற்குமுன் கிண்ணம் வெல்லாத இரு அணிகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.