அரையிறுதியில் அல்ஜீரியா

அரையிறுதியில் அல்ஜீரியா

1 mins read

கெய்ரோ: ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு அல்ஜீரி யாவும் துனீசியாவும் முன்னேறி உள்ளன.

ஐவரி கோஸ்ட் குழுவிற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அல்ஜீரியா 20வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற் றது. அல்ஜீரியாவின் முன்னாள் வெஸ்ட் ஹேம் வீரர் ஃபெக் ஹவுலி அந்த கோலைப் போட்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அல்ஜீரியா கோல் போட தவறிவிட்டது.

பாக்தான் மீது கோல் காப் பாளர் சில்வியனின் தப்பாட்டம் காரணமாக அல்ஜீரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப் பட்டது.

62வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் விளையாட்டாளரும் ஆஸ்டன் வில்லா வீரருமான ஜோனதன் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.

இதற்கிடையே, ஐவரி கோஸ்ட் வீரர் மேக்ஸ் கர்டெல் உதைத்த பந்தை அல்ஜீரிய கோல் காப்பாளர் ரெய்ஸ் கோலாக விடாமல் தடுத்துவிட்டார்.

1-1 என சமநிலையில் இருந்த தால், ஆட்டம் கூடுதல் நேரத் திற்குச் சென்றது. அப்போதும் கோல் எதுவும் விழாததால் பெனால்டி முறை நடத்தப்பட்டது. இதில் 3-4 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா வெற்றி பெற்றது.

1990ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆப்பிரிக்க கிண்ணம் வெல்லும் முனைப்பில் உள்ள அல்ஜீரியா நாளை நைஜீரியாவுடன் மோது கிறது.

இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் மடகாஸ்கர் குழுவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய துனீசியா வீழ்த்தியது.

அடுத்து அரை இறுதியில் துனீசியா, செனகலுடன் பொருத இருக்கிறது.