இங்கிலாந்து வீரர் கிரௌச் ஓய்வு

இங்கிலாந்து வீரர் கிரௌச் ஓய்வு

1 mins read

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர் கிரௌச் தனது 21 ஆண்டுகால காற்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார். 38 வயது கிரௌச், போர்ட்ஸ்மவுத், ஆஸ்டன் வில்லா, லிவர்பூல், ஸ்டோக் சிட்டி உள்ளிட்ட 11 குழுக்களுக்காக விளையாடியவர். கடைசியாக அவர் விளையாடிய பர்னலி குழுவுடனான ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது.

பிரிமியர் லீக்கில் 468 ஆட்டங்களில், 108 கோல்களைப் போட்ட°கிரௌச், தேசிய குழுவிற்காகவும் 22 கோல்களை அடித்துள்ளார். மாற்று வீரராக ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.