காபூல்: உலகக் கிண்ண கிரிக் கெட் தொடரில் லீக் சுற் றோடு வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் பாக, பல எதிர்ப்புகளுக்கு இடையே அஸ்கர் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு குல்பதீன் நயீப் நியமிக்கப்பட்டார்.
ஆயினும், குல்பதீன் தலை மையில் களமிறங்கிய அந்த அணி ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை ஆப்கானிஸ் தான் இழக்க குல்பதீனே முக்கிய காரணம் என்று ரசிகர்கள் முணு முணுத்தனர்.
இதையடுத்து, தோல்வி குறித்து மறுஆய்வு செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து குல்பதீனை நீக்கி விட்டு, புதிய தலைவராக ரஷீத் கானை நியமித்துள்ளது.
ஒருநாள் போட்டி மட்டுமல்லா மல் டெஸ்ட், 20 ஓவர் போட்டி களுக்கும் அவர் அணித் தலை வராக இருப்பார்.
ரஷீத் கான் இதுவரை 2 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டி கள், 38 டி20 அனைத்துலக போட்டிகளில் விளையாடியிருக் கிறார்.

