உலகக் கிண்ணத்தை இந்திய அணி கையில் ஏந்தும் காட்சியை நேரில் காணும் ஆர்வத்துடன் இறுதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை இந்திய ரசிகர்கள் பலரும் வாங்கிவிட்டனர்.
ஆனால், இந்திய அணி அரை இறுதியோடு வெளியேறியதால், இந்திய ரசிகர்கள் அந்த டிக்கெட்டு களை இங்கிலாந்து, நியூசிலாந்து ரசிகர்களுக்கு விற்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் நியூசிலாந்தின் சகல துறை ஆட்டக்காரர் ஜிம்மி நீஷம்.
ஆனால், அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க எண்ணாமல், உண்மையான கிரிக்கெட் ரசிகர் களுக்கு அதிகாரபூர்வ இணையத் தளம் மூலம் விற்பனை செய்து விடுங்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

