பார்சிலோனாவுடன் இணைந்தார் கிரீஸ்மன்

பார்சிலோனாவுடன் இணைந்தார் கிரீஸ்மன்

1 mins read
c18d3a79-65ae-4c33-ba5f-0631b96f2b98
பிரெஞ்சு ஆட்டக்காரர் அண்டுவான் கிரீஸ்மேன் -

மட்ரிட்: ஸ்பெயினின் அட்லெட் டிகோ மட்ரிட் காற்பந்துக் குழு விற்காக இதுநாள் வரை விளை யாடி வந்த பிரெஞ்சு ஆட்டக்காரர் அண்டுவான் கிரீஸ்மேன் (படம்) இன்னொரு ஸ்பானிய குழுவான பார்சிலோனாவில் இணைந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அட்லெட்டிகோவுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிரீஸ்மன் கடந்த மே மாதம் வேறு குழுவிற்குச் செல்லவுள்ள தாகக் கூறினார்.

கிரீஸ்மனை வாங்க பார்சி லோனா கையாண்ட அணுகு முறையால் அதிருப்தி அடைந்த அட்லெட்டிகோ மட்ரிட், 120 மில்லியன் யூரோ போதாது என்று கூறியுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோது 200 மில்லி யன் யூரோவாக இருந்த கிரீஸ் மனின் விலை ஜூலை 1ஆம் தேதி 120 மில்லியனாகக் குறைந்துவிட்டது.

இதுதொடர்பாக அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில், பார்சிலோனா மீதும் கிரீஸ்மேன் மீதும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

120 மில்லியன் யூரோ விற்கு பார்சிலோனா குழு வசம் சென்றுள்ள கிரீஸ் மேன், ஆக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆறாவது வீரராவார்.

நெய்மார், கிலியன் எம்பாப்பே, கொட்டீனியோ, ஃபெலிக்ஸ், டெம்பேலே ஆகியோரே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஐந்து காற்பந்து வீரர்கள்.