லார்ட்ஸ்: உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டித் தொடர் துவங்கு வதற்கு முன்னர் இந்தியா, ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இந்தியாவும் ஆஸ்தி ரேலியாவும் எதிர்பாராமல் வெளியே றிய நிலையில், இங்கிலாந்தோடு இன்று மல்லுக்கட்டப் போகிறது நியூசிலாந்து.
ஓட்ட விகித அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக் குள் நுழைந்தது என்றாலும் தற்போது வலுவான இந்திய அணியை வெளியேற்றிய பெரும் ஊக்கத் தோடு உள்ளது.
மேலும் இத்தொடரில் நியூசி லாந்தின் துல்லியமான பந்துவீச்சு எதிரணி விக்கெட்டுகளைப் பந்தா டியது.
அரையிறுதியில் இந்திய அணி யின் முக்கிய விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே சாய்த்து நெருக்கடி கொடுத்த டிரெண்ட் போல்ட்டும் ஹென்ரியும் நியூசி லாந்து அணியின் பெரும்பலம்.
ஆனால், அந்த அணியின் பந் தடிப்பு வரிசை ஒரளவுக்குத்தான் பலமாக உள்ளது.
நடப்புத் தொடரில், அந்த அணியில் சதம் அடித்த ஒரே ஒருவர் அணித் தலைவர் கேன் வில்லி யம்சன்தான். மற்ற யாரும் அதிக அளவில் ஓட்டங்களை எடுக்காதது நியூசிலாந்து அணி யின் பலவீனமாகப் பார்க்கப்படு கிறது.
ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோ போன்றவர்களை உள்ள டக்கிய இங்கிலாந்தின் பந்தடிப்பில் திணறிய நியூசிலாந்து லீக் போட்டி யில் 119 ஓட்டங்கள் வித்தியா சத்தில் தோற்றது.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் லீக் சுற்றிலேயே வெளி யேறிய இங்கிலாந்து, அதன்
அணுகுமுறைகளில் மாற்றம் கண்டது. அதன் பலனாகத்தான் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
எனவே கிண்ணத்தை வெல் லும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு அதிகம் உள்ளதாக எதிர்பார்ப்பு, சொந்த மண்ணில் அதிக ரசிகர் களுக்கு மத்தியில் விளையாடு வது என இங்கிலாந்து அணி இன்று அதிக நெருக்கடியில் விளையாடும்.
சூழ்நிலையைச் சரியாக பயன் படுத்திக்கொள்ளும் நியூசிலாந் திற்கு இங்கிலாந்து மீதான நெருக் கடி சாதகமான ஒன்று.
இந்நிலையில், நியூசிலாந்தை வெல்வது கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார் 27 ஆண்டு களுக்குப் பிறகு இறுதிப் போட் டிக்கு முன்னேறியுள்ள இங்கி லாந்து அணியின் தலைவர் ஆய்ன் மோர்கன்.
"இந்தியா = நியூசிலாந்து அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டத்தை நான் பயிற் சிக்குச் செல்லும் வரை பார்த்தேன். கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டம் அது.
"நியூசிலாந்து வீரர்கள் அற்புத மாக பந்து வீசினார்கள். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
"நியூசிலாந்து அணி இந்தத் தொடர் முழுவதுமே வீழ்த்துவதற்கு கடினமான அணியாக திகழ்ந்து வருகிறது என்றே நினைக்கிறேன். லீக் சுற்றிலும் சிறப்பாக விளை யாடினார்கள்.
"அரையிறுதியில் நியூசிலாந் தின் செயல்திறன் அநேகமாக இந்தத் தொடரில் அந்த அணியின் சிறந்த ஆட்டமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
"இறுதிப் போட்டியில் நியூசி லாந்து அணியை வீழ்த்துவது கடி னமாக இருக்கும். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்," என்று கூறினார்.
இதேபோல் நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டெட், கிண்ணத்தை வெல்ல இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
"யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியவில்லை. இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருக் கிறது.
"இப்போட்டியில் நாங்கள் இங் கிலாந்தைவிட சற்று சிறப்பாக விளையாட வேண்டும்.
"எந்தத் தவறும் செய்யாமல் சரியான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றில்லை.
"ஆடுகளத்தில் எதிர்கொள் ளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்பதே முக்கியம்.
"முடிவைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், சிறந்த ஆட் டத்தை வெளிப்படுத்த முனை வோம்," என்றார் கேரி ஸ்டெட்.
சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்க இருக்கும் இப்போட்டியில் யார் கிண்ணத்தை வென்றாலும் அவர் களுக்கு அது முதல்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற் றிய மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.

