செரீனாவின் கனவைத் தவிடுபொடியாக்கி பட்டத்தை கைப்பற்றினார் ஹலெப்

செரீனாவின் கனவைத் தவிடுபொடியாக்கி பட்டத்தை கைப்பற்றினார் ஹலெப்

1 mins read

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரை வென்று முதன் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றினார் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹலெப் (படம்).

விம்பிள்டனில் பெண்களுக் கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை எதிர்கொண்டார் சிமோனா ஹலெப்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹலெப் அதிரடியாக ஆடினார்.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே நீடித்த இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வீழ்த்தினார் ஹலெப். இதன்மூலம் அவர் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த ஆண்டு பிரெஞ்சு பொது விருது டென்னிஸ் தொடரை அவர் வென்றிருந் தார்.

கடந்த 12 மாதங்களில் செரீனா அடைந்துள்ள மூன்றாவது தோல்வி இது. இதனால் 24 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற மார்கிரட்டின் சாத னையை சமன் செய்யும் வாய்ப்பை யும் அவர் நழுவவிட்டார்.