பெர்த்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து பால் போக்பா விலகக்கூடும் என்று யூகங்கள் நிலவி வரும் வேளையில், அவர் மேன்யூ குழுத் தலைவராக வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார் அக்குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்.
குழுத் தலைவராக இருந்த அண்டோனியோ வெலன்சியா கடந்த பருவத்தோடு மேன்யூவில் இருந்து விலகினார்.
புதிய குழுத் தலைவருக்கான பரிசீலனை நடந்த வரும் நிலையில், பருவத்திற்கு முந்திய ஆட்டமொன்றில் ஆஷ்லே யங், குழுத் தலைவராக செயல்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் பெர்த் குளோரி குழுவிற்கு எதிரான ஆட்டத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது மேன்யூ.
இந்த ஆட்டத்தையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோல்ஸ்கர், "குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சில சாத்தியங்கள் உள்ளன.
"பருவத்திற்கு முந்திய ஆட்டம் எப்படி செல்கிறது என்று பார்ப்போம். நன்றாக ஆய்வு செய்து முடிவு செய்வோம். அடுத்தப் பருவம் தொடங்கும்போது அறிவிப்போம்.
"குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஆஷ்லே யங் அப்பொறுப்பில் இருப்பார்," என்று கூறினார்.
குழுத் தலைவர் பரிசீலனை பட்டி யலில் பால் போக்பாவின் பெயர் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சோல்ஸ்கர் 'ஆம்' என்ற பதிலளித்தார்.
ஆனால், போக்பாவோ செய்தியாளர் கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மேன்யூவிலிருந்து வெளியேறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இன்னோர் வீரர் ரொமேலு லூகாகு.
இந்நிலையில் லுகாகு அடுத்தப் பருவத்தில் மேன்யூ குழுவில் நீடிப்பாரா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்ட சோல்ஸ்கர், மேன்யூவிற்குப் புதிய ஆட்டக்காரர் கள் வரக்கூடும் என்று கூறினார்.
அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற பருவத்திற்கு முந்திய ஆட்டமொன்றில் செயின்ட் பேட்ரிக்ஸ் அத்லெடிக் குழுவை 4-0 என வென்றது செல்சி.

