புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீசும் பாணியால் ஈர்க்கப்பட்ட மூதாட்டி ஒருவர் அவரைப் போலவே பந்துவீச முயலும் காணொளி இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வீரரான பும்ராவின் பந்துவீச்சுப் பாணி வித்தியாசமானது. அவரது பந்துவீச்சுப் பாணியால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள, மூதாட்டி ஒருவர் பும்ரா போலப் பந்துவீச முயற்சிக்கும் காணொளியால் பும்ராவும் ஈர்க்கப்பட்டுள்ளார். பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் அக்காணொளியைப் பகிர்ந்துகொண்டதோடு தனது மகிழ்ச்சியையும் பதிவிட்டிருந்தார். சாந்தா சக்குபாய் என்ற ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட அக்காணொளிக்கு நேற்று வரை 22,000 மேற்பட்ட 'லைக்'குள் கிடைத்துள்ளன. பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ரா, உலகக் கிண்ணத் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

