கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி முதன்முறையாக வாகை சூடியுள்ளது. ஆட்டம் சமநிலையில் முடிந்தபோதும் 'சூப்பர் ஓவர்' முறையில் இங்கிலாந்து நியூசிலாந்தை வென்றது.
லண்டனின் லார்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் மோதியது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் மட்டையடிக்க தெரிவு செய்தார்.
நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அணி அதே போல 50 ஓவரில் 241 ஓட்டங்களை எடுத்தது. 'சூப்பர் ஓவர்' முறையின்படி இரு அணிகளுக்கும் தலா ஒரு 'ஓவர்' கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 15 ஓட்டங்களை எடுத்தது. அதே அளவு ஓட்டங்களை நியூசிலாந்து எடுத்ததை எடுத்து 'பவுண்டரி'கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி (26 புவண்டரி) நியூசிலாந்து அணியை (17 பவுண்டரி) வென்றதாக அறிவிக்கப்பட்டது.

