மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்து குழுவின் புதிய விளையாட்டுச் சட்டை

மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்து குழுவின் புதிய விளையாட்டுச் சட்டை

1 mins read
8a502bcd-6685-402c-9874-edcedf40af3c
படம்: அடிடாஸ் -

இனிவரும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்து குழுவின் புதிய விளையாட்டுச் சீருடையை 'அடிடாஸ்' விளையாட்டு ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செந்தத் திடலில் அல்லாமல் வேறு திடல்களில் விளையாடும் மான்செஸ்டர் யுனைட்டெட் குழுவினர் இதனை அணிவர்.

1998/1999 பருவத்தில்' பிரிமியர் லீக்', 'எஃப்ஏ' கிண்ணம், 'யுஏஃபா சாம்பியன்ஸ் லீக்' ஆகியவற்றை மான்செஸ்டர் யுனைட்டெட் வென்று, இந்த மூன்று அரிய வெற்றிகளையும் முதன்முதலாகப் பெற்ற காற்பந்து குழு என்ற பெருமையைப் பெற்றதை இந்தப் புதிய சீருடைகள் கொண்டாடுகின்றன.

இந்தச் சீருடை அடிடாஸ் சன்டெக், அடிடாஸ் எம்பிஎஸ், அடிடாஸ் ஐயோன் ஆகிய கடைகளில் ஜூலை 19ஆம் தேதி முதல் விற்கப்படும்.