கவுண்ட்டி: அஸ்வின் அசத்தல்

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்  ரவிச்சந்திரன், கவுன்ட்டி கிரிக்கெட்டில் அரை சதத்துடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி சாதனை புரிந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவருக்கு ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் சர்ரே அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் 2வது இன்னிங்சிலும் 75  ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசியதோடு இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். 

நாட்டிங்காம்ஷைர் அணியில் இரண்டு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் இவர்தான் என்றாலும் அந்த அணி 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அஸ்வின் ரவிச்சந்திரன். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேரக்கட்டுப்பாடு விதிமீறல் குறித்த முழுமையான விசாரணை முடிவதற்குள் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது முறையானதாக இருக்காது என்று கூறியுள்ளார் சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் (இடது),

13 Dec 2019

விதிமுறை மீறல்: காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய துப்பாக்கி வீரர் ரவிக்குமார். படம்: ஊடகம்

13 Dec 2019

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் துப்பாக்கி வீரர்