புஜாரா: டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்

உலக டெஸ்ட் வெற்றியாளர் கிண்ணப் போட்டி முறையை ஐசிசி அமல்படுத்தியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் காற்பந்து லீக் போன்று நடைபெறும்.

ஒவ்வோர் அணியும் தங்களது நாட்டிலும் எதிரணி நாட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். இறுதியில் ஒட்டுமொத்தமாக எந்த அணி அதிக புள்ளிகள் பெறுகிறதோ? அந்த அணிக்கு வெற்றியாளர் பட்டம் வழங்கப்படும்.

இந்தியா உலக டெஸ்ட் வெற்றியாளர் கிண்ணப் போட்டி தொடரில் முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

இந்நிலையில்  வெற்றியாளர் கிண்ணப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் எனப் புஜாரா தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்