இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஜேசன் ராய்

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றியாளர் கிண்ணத்தை இங்கிலாந்து வென்றது.

ஜேசன் ராய் 8 போட்டிகளில் ஒரு சதம், நான்கு அரைசதங்களுடன் 443 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதன்முறையாக அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரேயொரு போட்டியில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் இடம் பிடித்துள்ளார்.

28 வயதாகும் ஜேசன் ராய் 2014 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும், 2015ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். தற்போது வரை 84 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!