மாற்று வீரர்களால் பந்தடிக்கவும் பந்து வீசவும் முடியும்

மும்பை: ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்குக் களம் இறங்க முடியாத அளவிற்குக் காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாகக் களமிறக்கப்படும் மாற்று வீரர் பந்தடிக்கவும் பந்து வீசவும் அனுமதிக்கப்படுவார் என்று அனைத்துலக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட்டில் இதுவரை ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்த வீரர்கள் மட்டுமே பந்தடிப்பு மற்றும் பந்துவீச்சுப் பணியைச் செய்ய முடியும். ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து ஒரு வீரருக்குத் தலையில் அடிபட்டு வெளியேறினால், அவர் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறியதாகக் கருதப்படும். 

அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களக்காப்பு செய்யலாம். ஆனால் பந்து வீசவோ, பந்தடிக்கவோ முடியாது. இதனால் காயமடையும் வீரர் இடம்பிடித்துள்ள அணிக்குச் சிக்கல் ஏற்படும். இக்கட்டான நிலையில் பந்தடிப்பு மற்றும் பந்துவீச்சில் அவரது பங்களிப்பு இல்லாமல் போகும். 

அவ்வாறு இருப்பதால் அந்த அணிக்குப் பலவீனத்தை ஏற்படுத்தும்.  இதனால் தலையில் அடிபட்டுப் பெரும் அதிர்ச்சியுடன் பந்தடிக்க முடியாத நிலைமை ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்கு ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராகக் களம் இறங்கும் வீரரை பந்தடிக்க அனுமதிக்க வேண்டும். 

அதேபோல் பந்து வீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

பல நாட்களாக இதுகுறித்துப் பரிசீலனை செய்து வந்த ஐசிசி நேற்று அனுமதி அளித்துள்ளது. 

இது ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து நடப்–புக்கு வரு–கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்