சச்சினுக்கு உயரிய விருது

லண்டன்: சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணியின் அணித் தலைவராக இருந்தவரும் ஆவார். கிரிக்கெட்டில் எல்லாக் காலங்களிலும் விளையாடிய வீரர்களில், சச்சின் (படம்) மிகச் சிறந்த  மற்றும் மிகவும் மதிக்கப்படும்  வீரராகப் பரவலாகக் கருதப்படுகிறார்.

இதனால் இவர் இன்றளவும் கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படுகிறார்.  

அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக 200 ஓட்டங்கள் எடுத்தவர் சச்சினே. 

இவர் 6 முறை உலகக் கிண்ணம் போட்டிகளில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்களுள் சச்சினும் ஒருவர் ஆவார்.

இன்றளவும் இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சின்தான் எங்கள் கிரிக்கெட் கடவுள் எனக் கூறும் அளவிற்கு தீவிர ரசிகர்களும் இவருக்கு உண்டு. இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிக உயரிய விருதான  ‘ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் விருதினை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேரக்கட்டுப்பாடு விதிமீறல் குறித்த முழுமையான விசாரணை முடிவதற்குள் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது முறையானதாக இருக்காது என்று கூறியுள்ளார் சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் (இடது),

13 Dec 2019

விதிமுறை மீறல்: காற்பந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய துப்பாக்கி வீரர் ரவிக்குமார். படம்: ஊடகம்

13 Dec 2019

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் துப்பாக்கி வீரர்