பும்ராவுக்கு ஓய்வு; நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு

பும்ராவுக்கு ஓய்வு; நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு

2 mins read

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிராக நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் வேகப்பந்துவீச்சில் முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரீத் பும்ரா ஒருநாள், டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி டி20, ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சகல் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 4வது இடத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரேயாஸ் ஐயர், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயத்தில் இருந்து விஜய் சங்கர் குணமடையாததால், அவரும் சேர்க்கப்படவில்லை.

பாண்டியாவுக்கு முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 20 ஓவர் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தீபக் சாஹர், ராகுல் சாஹர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் காப்பாளர் டோனி 2 மாதங்கள் ராணுவப் பணிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், அவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீசில் தலா 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்ட் மாதம் நடக்கின்றன.

டெஸ்ட் வெற்றியாளர் கிண்ணப் போட்டியின் ஒரு பகுதியாக டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்குகிறது.

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடர், அடுத்த மாதம் 3ஆம் தேதியும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 8ஆம் தேதியும் தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சகல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.