சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் யுவன்டஸ் குழுவும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவும் பொருதின. அதில் ஸ்பர்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முற்பாதியில் ஸ்பர்ஸின் எரிக் லமேலா ஒரு கோல் போட்டார்.
ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் யுவன்டஸின் கொன்சாலெஸ் ஹிகுவேன் ஒரு கோல் போட்டு சமநிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் போட்டு யுவன்டசை முன்னுக்குக் கொண்டு சென்றார். பின்னர் 65வது நிமிடத்தில் ஸ்பர்ஸின் லுக்காஸ் மோரா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார்.
ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் குழுவின் கேப்டன் ஹேரி கேன் வெற்றி கோலை போட்டார்.

