டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக் குழுத் தலைவர் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலம் குறித்து இந்திய அணித் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் வெளிப்படையாக பேசியுள்ளார்.

‘‘டோனி தனது ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. அவர் துணை ராணுவப் படையில் சேவை ஆற்ற இரண்டு மாதம் விடுப்பில் சென்றுள்ளார்,’’ என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மிகச் சிறந்த வீரருக்கு அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெரியும் என்று கூறிய பிரசாத், ‘‘ஒரு வீரர் ஓய்வு அறிவிப்பது அவரவர் கையில் தான் உள்ளது. இதில் பிசிசிஐ தலையிடாது,’’ என்று சொன்னார்.

உலகக் கிண்ணத் தொடருக்கு பின் டோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது மிகப் பெரிய பேசு பொருளாக இருந்து வந்தது. அவருக்கு இதுவே கடைசி உலகக் கிண்ணப் போட்டி என்றும் கூறப்படுகிறது.

கிரிக்கெட்டிலிருந்து டோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக இருந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, 2022ஆம் ஆண்டு வரை விளம்பர ஒப்பந்தங்கள் இருப்பதால் டோனி ஓய்வு பெற வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மோதவிருக்கும் நிலையில், இரு மாதகால ராணுவ பயிற்சிக்கு செல்ல இருப்பதாக பிசிசிஐக்கு டோனி கடிதம் எழுதியிருந்தார்.

டோனியின் கடிதத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடமாட்டார் என்பது உறுதியானது.

இந்திய அணி விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்டது போலவே டோனியின் பெயர் அதில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், விரித்திமான் சாஹாவும் அணியில் இருக்கிறார்.

இதற்கிடையே, டோனி இரு மாதங்கள் ராணுவ பயிற்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், அவருக்கு அதற்கான அனுமதியை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவர் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவப் பயிற்சியில் டோனி கலந்துகொள்ள முடியுமே தவிர, ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைகளில் அவர் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!