மாட்டா: யுனைடெட்டை ஒருங்கிணைத்து வரும் போக்பா

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரரான பால் போக்பா குழுவின் ஆட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று அவரது சக ஆட்டக்காரரான யுவான் மாட்டா தெரிவித்துள்ளார்.

போக்பா, யுனைடெட்டை விட்டு வெளியேறி இன்னொரு குழுவுக்கு ஆடவிருக்கிறார் என்று இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

போக்பாவின் முகவரும் பிரான்சின் அனைத்துலக ஆட்டக்காரர் போக்பா யுனைடெட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வேளையில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் தொடங்கு வதற்கு முன் ஆயத்த ஆட்டங்களில் விளையாடி வரும் யுனைடெட் இதுவரை அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது நல்ல அறிகுறியாகத் தெரிகிறது என்றும் மாட்டா கூறியுள்ளார்.

“போக்பா ஒரு மிகச் சிறந்த மத்திய திடல் ஆட்டக்காரர். குணத்திலும் அவர் மிக நல்லவர். அவர் இக்குழுவில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்,” என்றும் 31 வயது மாட்டா, போக்பாவுக்குப் புகழாரம் சூட்டினார்.

“போக்பா ஒருபோதும் குழுவுக்குப் பிரச்சினை கொடுத்ததில்லை,” என்று இம்மாதத் தொடக்கத்தில் குழுவின் நிர்வாகி சோல்சியார் தெரிவித்தார்.

சோல்சியாருக்குக் கீழ் 26 வயதாகும் பொக்பா தொடர்ந்து யுனைடெட் குழுவில் இருந்து விருதுகளை வெல்ல உதவ வேண்டும் என்று விரும்பும் மாட்டா, “விளையாட்டாளர்களான எங்களைப் பொறுத்தவரை போக்பா ஒரு தலைசிறந்த ஆட்டக்காரர். அவர் தொடர்ந்து குழுவில் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.

“கடந்த பருவத்தைவிட இந்தப் பருவத்தில் நாம் சிறப்பாக செய்ய வேண்டும். மான்செஸ்டர் யுனைடெட் இங்கிலாந்தில் எந்தக் குழுவைக் காட்டிலும் அதிக விருதுகள் வென்றுள்ளது. அந்தச் சிறப்பைக் கட்டிக்காக்க வேண்டும்,” என்று மாட்டா ஒரு பேட்டியில் கூறினார்.

“மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஆட்டக்காரர் என்று கூறிக்கொள்வதில் ஒரு பெருமை உள்ளது. அதனால்தான் மற்ற குழுக்களிடமிருந்து நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் வந்தபோதும் நான் அதை ஏற்கவில்லை.

“இந்தக் குழுவுக்காக விளையாடி அதிக விருதுகளை வென்று தர உறுதியாக இருக்கிறேன். இதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

‘‘தமது சக நாட்டவரான தலைசிறந்த கோல் தற்காப்பாளர் டாவிட் டி கியாவும் யுனைடெட்டுடன் நீண்டகால ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

‘‘அவர் தலைசிறந்த கோல் தற்காப்பாளர்களில் ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

‘‘ஆக, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகச் சிறப்பாக ஆடி வெற்றிகளைக் குவிக்க காத்திருக்கிறோம்,’’ என்று மாட்டா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!