வெஸ்ட் இண்டீஸில் மீண்டும் பொல்லார்ட், சுனில் நரைன்

ஜமைக்கா: இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், சுனில் நரைன் இடம்பிடித்துள்ளனர்.

உலக கிண்ண தோல்விக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. 6ஆம் தேதி வரை 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஒருநாள் தொடர் நடக்கிறது. டெஸ்ட் தொடர் 22 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. மூன்று வகை போட்டிகளுக்கான அணியும் தேர்வுசெய்யப்பட்டது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பொல்லார்ட், சுனில் நரைன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்து வீரரான சுனில் நரைன் 20 ஓவர் அனைத்துலக போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

20 ஓவர் உலகக் கிண்ணத்தைக் கருத்தில் கொண்டு பொல்லார்ட், சுனில் நரைனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகத் தேர்வுக் குழுவின் இடைக்கால தலைவர் ராபர்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்து உள்ளார்.

தொடக்க அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கனடாவில் நடைபெறும் போட்டியில் ஆடுவதால் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை.

ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்சல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் அவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். புதுமுக விக்கெட் காப்பாளராக அந்தோணி பிராப்பிள் தேர்வாகி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸின் கார்லோஸ் பிரத்வெய்ட் (அணித்தலைவர்), ஜான் கேம்ப்பெல், எவின் லூவிஸ், சிம்ரன் ஹெட்மையர், நிக்கலஸ் பூரன், கைரன் பொல்லார்ட், ரோவ்மன் பொவல், கீமோ பால், சுனில் நரைன், ஷெல்டன் காட்ரெல், ஒஷேன் தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், கேரி பியர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!