கொழும்பு: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியோடு இலங்கையின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா ஓய்வுபெறுகிறார்.
'யார்க்கர்' மன்னான இவர் இலங்கை அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இதனால் உலகக் கிண்ணப் போட்டியுடன் அவர் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பங்ளாதேஷ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். முதல் ஒருநாள் போட்டி இலங்கை பிரேமதாசா மைதானத்தில் வருகிற 26ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியோடு அவர் ஓய்வுபெறுவதாக தம்மிடம் தெரிவித்திருப்பதாக இலங்கை அணித் தலைவர் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
''பங்ளாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவார். அதன்பின் ஓய்வு பெறுகிறார்.
"இது அவர் என்னிடம் கூறியது. ஆனால், தேர்வாளர்களிடம் அவர் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியாது. என்னிடம் கூறியது ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்பதுதான்,'' என்றார்.

